Yaavum Enadhe Lyrics
எனக்காய் என் அறையில் கேட்கும் மெல்லிசை
எனக்காய் என் மேல் தூவும் மழை
என் மேலே மையல் நான் ஆகிறேன்
கொஞ்சிக் கொஞ்சி பேசும் என் கண்களே!
எந்தன் அரண்மனைக் குட ிசையில்
உறவின் நேசத்தில் வீசும் பாசத்தின் வாசம்
என்றென்றும் வேண்டுமே வேண்டுமே!
ஹோ ஹோ யாவும் யாவும் எனதெனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே!
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழா!
இணைந்தே நாங்கள் காணும் கனா!
எத்தனை மேடை மேலே ஏறினோம்
வெற்றி தொட்ட அந்த நிமிடங்களே!
நாங்கள் உலவிடும் தேசமே
உந்தன் இள மகள் மீது நீ கொள்ளும் காதல்!
என்றென்றும் வேண்டுமே வேண்டுமே!
ஹோ ஹோ யாவும் யாவும் எனதெனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே!
முன் போகாத பூமியில்
நாம் கீழ்நோக்கி வாழ்கிறோம்
நாம் ஒன்றாக மாற்றுவோம், மேல் ஏற்றுவோம்
நண்பா!
உறங்க பூமி தானே எந்தன் குடில்
விழித்தால் நான் நீராட கடல்
எத்தனை தேசங்கள் என் மண்ணிலே
யாவும் ஒன்றே எந்தன் கண் ரெண்டிலே!
மத நிற இன பேதங்கள்
மறந்திட எந்தன் நெஞ்சில் உண்டாகும் காதல்
என்றென்றும் வேண்டுமே வேண்டுமே!
ஹே ஹே யாவும் எனதெனதே
ஹோ ஹோ காதல் விரிகிறதே
ஹே ஹே யாவும் எனதெனதே
ஹோ ஹோ காதல் விரிகிறதே
யாவும் எனதே
காதல் விரிகிறதே
ஹே ஹே யாவும் எனதெனதே
ஹோ ஹோ காதல் விரிகிறதே
யாவும் எனதே
Lyrics powered by www.musixmatch.com
More from Yaavum Enadhe
Loading
You Might Like
Loading
5m 3s · Tamil