Nithirai Nila Lyrics

உ-உ-ஒ-ஓ
உ-உ-ஒ-ஓ

என் காதல் பெண்ணே
என்தன் கண்ணின் கண்ணே
என் வாழ்வின் பின்னே
வா!, வா!
நானொ காயும் நிலா!
நீயோ தேயும் நிலா!
நீ இல்லை என்றால் வாழ்வே!

நித்திரை, நித்திரை, நித்திரை நிலா!
நித்திரை, நித்திரை, நித்திரை நிலா!

மண்ணில் வாழும் வரை
கண்ணில் சோகம் இல்லை
இன்பம் கொள்ளை கொள்ளை உயிரே
உன்னை பார்த்தால் இனிக்கிறது
நினைத்தால் வலிக்கின்றது
வலித்தால் உறக்கம் இல்லையே!

நித்திரை, நித்திரை, நித்திரை நிலா!
நித்திரை, நித்திரை, நித்திரை நிலா!

அ-அ-ஆ, ஹ-ஹ, ஒ-உ-ஒ

என் உசுரோ பெண்ணனே உன் உடம்பில்
உன் உசுரோ இப்ப என் உடம்பில்
வாழ்வதுனா சேர்ந்து வாழ்ந்திருப்போம்
போறதுனா சேர்த்து போயிருவோம்
வரும் இரவை நினைத்து மறுகும் மனமே!
பகல் நேரம் வாழ்ந்தி விடு
ஒருநாள் ஒருநாள் வாழ்வென்றாலும்
ஒரு நூறு ஆண்டுகள் ஆண்டுவிடு

ஆ-ஆ-க

நேற்றுகளும் மீண்டும் வந்ததில்லை
நாளைகளோ நம் சொந்தம் இல்லை
நிகழ் காலம் போல இன்பம் இல்லை
நீ இருந்தால் ஒரு துன்பம் இல்லை
என் உயிரே, உயிரே உயிரின் உயிரே
உடல் தாண்டி போகாதே
என் உறிமை தலைவி பிரியும் பொழுது
உயிர் தந்து பாரம் தாங்காதே!

மண்ணில் வாழும் வரை
கண்ணில் சோகம் இல்லை
இன்பம் கொள்ளை கொள்ளை உயிரே
உன்னை பார்த்தால் இனிக்கிறது
நினைத்தால் வலிக்கின்றது
வலித்தால் உறக்கம் இல்லையே!

நித்திரை, நித்திரை, நித்திரை நிலா!

என் வாழ்க்கையின் மையமே
என்னை விட்டு எங்கும் நீங்காதே!
என் ஜீவனும் தேகமும் தாங்காதே!
என் வானமும் பூமியும் விடை பெரும்
உன்தன் பிரிவிலே!
காதலே, காதலே கலையாதே!

ஹே, நண்பனே நண்பனே வானவில்
வாழ்வது சில நேரம்
கண்களால் அனுபவி இன்நேரம்
யாருமே, யாருமே பூமியில்
வாழ்வது சில காலம்
இன்பமே இன்பமே, உன் ஞாயம்
நீ-நீ, நித்திரை, நித்திரை
நீ-நீ, என் நித்திரை கனா!

உ-உ-ஒ-ஓ
உ-உ-ஒ-ஓ

எல்லாம் மாயம் தானா?
வாழ்வே சோகம் தானா?
இது நாயம் தானா நிலவே?
நீயொ முன்னால் சென்றாய்
நானும் பின்னால் வருவேன்
சாவில் ஒன்றாய் சேர்வோம் உயிரே

Writer(s): Kaviperarasu Vairamuthu, Mathews Pulickan
Lyrics powered by www.musixmatch.com


More from Nithirai Nila

Loading

You Might Like

Loading


FAQs for Nithirai Nila